Header Ads

மீண்டும் வெற்றிகரமாக விண்வெளிக்கு குரங்கை அனுப்பிய இரான்

இரான் இரண்டாவது தடவையாகவும் குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஓர் அங்கமாகவே இரான் இந்தக் குரங்கை அனுப்பி வைத்துள்ளது.

ஃபர்ஹாம் என்று பெயரிடப்பட்ட குரங்கு, விண்வெளிக்குச் சென்று முழுமையான உடல்நலத்துடன் மீண்டும் திரும்பியிருப்பதாக இரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி கூறியுள்ளார்.

திரவநிலை எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட் மூலமாக அந்தக் குரங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த திரவநிலை-எரிபொருள் கொண்ட ராக்கெட் தொழிநுட்பத்தை இரான் முதற்தடவையாக பயன்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.