Header Ads

பிப்ரவரி மாதம் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்வேன்: மீரா ஜாஸ்மின்

இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசும் மீராஜாஸ் மினும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீராஜாஸ்மின் தவறாமல் பங்கேற்று வந்தார். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

இந்த நிலையில் துபாய் என்ஜினீயரை மீராஜாஸ்மின் மணக்கப்போவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. மணமகன் பெயர் அனில் ஜான்டைடஸ், இவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த டைடஸ்–சுகுதகுமாரி தம்பதியரின் மகன் ஆவார். அனில் ஜான் துபாயில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இதனை மீராஜாஸ்மினும் தற்போது உறுதிபடுத்தி உள்ளார்.

அனில் ஜான் டைடஸை நான் மணக்கப் போவது உண்மைதான். எங்கள் திருமணம் பிப்ரவரி மாதம் 12–ந்தேதி நடக்கும் என்று அறிவித்து உள்ளார். திருமணத்துக்கு முன் கைவசம் உள்ள படங்களை முடித்து கொடுத்து விட திட்டமிட்டு உள்ளார். இதனால் இரவு பகலாக படப் பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவாரா அல்லது தொடர்ந்து நடிப்பாரா என்பது பற்றி தெரிய வில்லை.

No comments:

Powered by Blogger.