Header Ads

தமிழ் திரையுலகில் கலக்கும் புதுமுக கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில் புதுமுக கதாநாயகிகள் கலக்குகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அவர்கள் வந்துள்ளனர். மும்பை, கொல்கத்தாவில் இருந்தும் சிலர் வந்து இருக்கிறார்கள். இளம் கதாநாயகர்கள், புதுமுக நடிகைகளுடன்தான் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றன். ஓரிரு படங்களிலேயே இந்த நடிகைகள் உச்சத்துக்கு போய் உள்ளனர். 

சம்பளத்தையையும் கணிசமாக ஏற்றி இருக்கிறார்கள். இந்த நடிகைகள் பட்டியலில் முதன்மையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு ஆகிய 4 படங்களுமே வெற்றிகரமாக ஓடின. தற்போது விஷால் ஜோடியாக நான் சிவப்பு மனிதன், விமலுடன் மஞ்சப்பை, சித்தார்த் ஜோடியாக ஜிகர்தாண்டா, கவுதம் கார்த்தியுடன் சிப்பாய் படங்களில் நடிக்கிறார். 

இவருக்கு அடுத்து வேகமாக வளர்பவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானார். அப்படம் ஹிட்டானதால் படங்கள் குவிந்துள்ளது. விதார்த் ஜோடியாக காட்டுமல்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், அதர்வாவுடன் ஈட்டி, விஷ்ணு ஜோடியாக வீரதீர சூரன் படங்களில் நடிக்கிறார். 

நஸ்ரியாவும் இவர்களுக்கு இணையாக முன்னேறியுள்ளார். நேரம் படம் இவரை பிரபலபடுத்தியது. பின்னர் ஆர்யா ஜோடியாக ராஜாராணி படத்தில் நடித்தார். ஜெய் ஜோடியாக திருமணம் எனும் ரிக்கா மற்றும் வாய் மூடி பேசவும் படங்களில் இப்போது நடித்து வருகிறார். 

அட்டகத்தியில் அறிமுகமான நந்திதாவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். எதிர்நீச்சல் படத்தில் இவர் கேரக்டர் பேசப்பட்டது. ப்ரியா ஆனந்த் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இளம் கதாநாயகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறியுள்ளார். 

விக்ரம் பிரபுவுடன் அரிமாநம்பி, கவுதம் கார்த்திக்குடன் வை ராஜா வை மற்றும் அதர்வாவுடன் இரும்புக் குதிரை விமலுடன் காதல் கொஞ்சம் கம்மி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக நடித்த சுரபி, கடல் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்த துளசி, பீட்சா படத்தில் வந்த ரம்யா நம்பீசன், ராஜபாட்டையில் அறிமுகமாகி தற்போது வேட்டைமன்னன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் திக்ஷாசேத், சரஸ்வதி சபதம், ஜில்லா படங்களில் நடித்த நிவேதாதாமஸ் மெய்யழகி படத்தில் நடித்த ஜெய்குவே தனி, நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி போன்றோரும் ரசிகர்களை கவர்ந்த புது வரவுகள். 

கடந்த வருடம் மட்டும் இதுபோல் நாற்பது புதுமுக நடிகைகள் தமிழ் படங்களில் அறிமுகமாகியுள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களால் முன்னணி நடிகைகள் மார்க்கெட்டில் பாதிப்பு ஏற்படவில்லை. நயன்தாரா, திரிஷா, காஜல்அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா போன்றோர் பெரிய ஹீரோக்களுடன் பிசியாகவே நடித்து வருகிறார்கள். இவர்களில் நயன்தாரா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாகியுள்ளன. தமிழ் படங்களில் அதிகம் சபம்ளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

No comments:

Powered by Blogger.