Header Ads

நடிகையுடன் தொடர்பை துண்டியுங்கள்! ஜனாதிபதியின் மனைவி தடாலடி....

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி வேலரி தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த், பிரபல நடிகையான ஜூலி கேயட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக புகைப்பட ஆதாரங்களுடன் கடந்த 10ம் திகதி ஊடகங்களில்  தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனாதிபதியின் மனைவி வேலரி, மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கையில், தானும், தன்னுடைய வாழ்க்கை துணையும் மிக மோசமான பாதையை கடந்து வந்ததாக வேலரி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் ஒலாந்த் நடிகையுடன் உள்ள தொடர்பினை துண்டித்தால் மட்டுமே மன்னித்து ஏற்றுக் கொள்வேன் என வேலரி கூறியதாக உறவினர்கள் பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மிச்ஷெலும் தன் வாழ்க்கை துணையுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.