தனி விமானத்தில் ஷூட்டிங்கிற்கு வரும் நடிகை
சோனியா அகர்வால் நடித்த ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில், சேனல் நிருபராக நடித்தவர் புன்னகை பூ கீதா. மலேசியாவை சேர்ந்த அவர், சில தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இப்போது அவர் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், நீயெல்லாம் நல்லா வருவடா. ஆர்.நாகேந்திரன் இயக்குகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் விமல் ஜோடியாக நடிக்கும் புன்னகை பூ கீதா, மலேசியாவில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதுகுறித்து ஆர்.நாகேந்திரனிடம் கேட்டபோது, உண்மைதான். 4 பேர் மட்டுமே அமரக்கூடிய சிறிய ரக விமானத்தில் வந்து அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் என்றார்.
No comments: