Header Ads

டாப்லெஸ் நடிகை திடீர் திருமணம் பாய்பிரண்ட் போலீசில் புகார்

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை படத்தில் நடித்த வீணா மாலிக் ரகசிய திருமணம் செய்ததை எதிர்த்து அவரது மாஜி பாய்பிரண்ட் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆங்கில இதழ்களில் டாப்லெஸ் போஸ்கொடுத்ததுடன், இணைய தள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் வீணா மாலிக். பாகிஸ்தான் நடிகையான இவர் இந்தி படங்களில் நடித்ததுடன் கன்னடத்தில் உருவான சில்க் ஸ்மிதா  வாழ்க்கை கதையான சில்க் சக்கத் மகா என்ற படத்தில் சில்க் வேடம் ஏற்று நடித்தார். சமீபத்தில் துபாய் சென்ற வீணா அங்கு தொழில் அதிபர் அசத் கான் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். பிறகு அவரே அதற்கான புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டார். விரைவில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளார். 

இவரது திடீர் திருமணம் திரையுலகினரை பரபரப்பில் ஆழ்த்திய அதேவேளையில் மாஜி பாய்பிரண்ட் பிரசாந்த் சிங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து அவர் மும்பை போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். நானும் வீணா மாலிக்கும் திருமணம் செய்யாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பாணியில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அவரது செலவுகளை நான்தான் பார்த்துக்கொண்டேன். எங்களுக்குள் காதல் மலர்ந்தது இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம். இந்தநிலையில் வீணா மாலிக்கும் அவரது தாயாரும் என்னை மிரட்டினார்கள். ரகசியமாக சேர்ந்து வாழ்க்கை நடத்தியது பற்றி வெளியில் கூறினால் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லி உன்னை சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டினார்கள். 

தற்போது வீணா மாலிக் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். என்னை அவர் நம்பிக்கை மோசடி செய்திருப்பதுடன் மிரட்டியும் உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து போலீசார் வீணா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகார் பற்றி கருத்து தெரிவித்துள்ள வீணா மாலிக், என் மீது பிரசாந்த் கொடுத்த புகாரில் உண்மை இல்லை. அவர் சாதாரண ஒரு பணியாளர்தான். அவருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் நான்தான் தந்துக்கொண்டிருந்தேன் என கூறி உள்ளார்.

No comments:

Powered by Blogger.