Header Ads

ஆர்யாவை தொடர்ந்து விஷாலையும் புறக்கணித்தார் ஸ்ருதி

ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால். 

அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் ஸ்ருதியை புக் செய்யலாம் என விஷால் டைரக்டரிடம் கூறி இருந்தாராம். இதையடுத்து விஷால் படத்துக்காகவும் ஸ்ருதியிடம் பேசப்பட்டது. அதற்கும் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்துள்ளார் ஸ்ருதி. 

இந்நிலையில் ஆர்யாவுக்கு சொன்னது போலவே கால்ஷீட் இல்லை என்ற ரீதியில் விஷால் தரப்புக்கு ஸ்ருதி தரப்பிலிருந்து பதில் வந்துள்ளதாம். இந்தி, தெலுங்கு படங்களுக்கே ஸ்ருதி முக்கியத்துவம் தருவதாகவும் தமிழ் படங்களை ஏற்க அவர் மறுப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

No comments:

Powered by Blogger.