நண்பரின் மனைவி படத்தை நெஞ்சில் செதுக்கிய நபர்! புனிதமான காதல்
நண்பரின் மனைவி புகைப்படத்தை நெஞ்சில் பச்சைகுத்திய குற்றத்திற்காக 35 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நேபாளத்தின் காவ்ரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார் கேசி. லாரி ஓட்டுனராக உள்ளார்.
இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இந்த புனிதமான காதலானது கள்ளக்காதலியின் பெயரை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ளும் அளவுக்கு கொண்டுசென்றது.
இந்த சம்பவமானது நண்பருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குமாரை பொலிசார் கைது செய்துள்ளளனர். இதுகுறித்து குமார் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில். நானும், எனது நண்பரும் வாகன ஓட்டுனர்களாக உள்ளோம்.
சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் தனது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் நண்பரின் மனைவியும், நானும் நெருக்கமாக பழகத் தொடங்கினோம்.
இந்நிலையில் என்னிடம் தனது புகைப்படத்தை கொடுத்து பச்சை குத்திக் கொள்ளுமாறு எனது காதலி கூறினார். இதையடுத்து நான் பச்சை குத்திக் கொண்டேன். நான் பச்சை குத்திக் கொண்டதை எனது நண்பர் ஒருவரிடம் காட்டினேன்.
அவர் மூலம் இது பரவிவிட்டது , இதனைத் தொடர்ந்து மனைவியின் படத்தை குமார் தனது நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதை அறிந்த எனது நண்பர், கோபமடைந்து தனது மனைவியிடம் உங்களுக்குள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று அடம் பிடித்துள்ளார். இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த நண்பர் பொலிசில் புகார் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு வழக்கில் நேபாளத்தில் ஒருவர் கைது செய்யப்படுவதே இதுவே முதல் முறை என்று நேபாள பொலிஸ் துறையினர் கூறியுள்ளனர்.
No comments: