Header Ads

அழகான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப ஆரஞ்சு பழத்தை யூஸ் பண்ணுங்க.

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தின் சீசன் என்பதால், இந்த பழங்கள் மிகவும் விலை மலிவில் கிடைக்கும். ஆகவே பலர் இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். அதற்கேற்றாற் போல் இப்பழத்தில் சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதுடன், இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, வலுவுடன் இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே ஆரஞ்சு பழத்தைக் கொண்டு கூந்தலைப் பராமரித்துப் பாருங்கள், பின் தெரியும் ஆரஞ்சு பழத்தின் சக்தி. அதிலும் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த ஆரஞ்சுப் பழத்தை பயன்படுத்தினால், உடனே அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது கூந்தலுக்கு ஆரஞ்சு பழத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!! கூந்தல் பராமரிப்பில் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்!!!1/8 கூந்தல் உதிர்தல் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பயோ ப்ளேவோனாய்டுகள் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும், இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட்டும் உள்ளது. 

No comments:

Powered by Blogger.