Header Ads

அமலாபாலின் ஒத்துழைப்பை பார்த்து வியந்த இயக்குனர்

ஜெயம்ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் நிமிர்ந்து நில் வருகிற 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

நாயகியாக அமலா பால். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் தயாரானது. தெலுங்கில் ஜெயம் ரவி வேடத்தை செய்தவர் நான் ஈ பட நாயகன் நானி.

தெலுங்கிலும் அமலா பால்தான் நாயகியாக நடிக்கிறார்.ஜெயம் ரவியுடன் தமிழ் பேசி நடித்த அதே காட்சியை உடனேயே தெலுங்கு பேசி நானியுடன் நடிக்க வேண்டும். ஒரு சிணுங்கல் இல்லை, ஒரு மறுப்பு இல்லை, ஒரு வெறுப்பு இல்லை பக்கா ஒத்துழைப்பு என்று அமலா பாலை புகழ்ந்தார் சமுத்திரக்கனி. மேலும் அமலா பால் மாதிரி ஒத்துழைப்பு தரும் நடிகையை பார்த்ததில்லை என்கிறார் சமுத்திரகனி.

இத்தோடு அவர் விட்டுவிடவில்லை. சமுத்திரக்கனி விரைவில் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார். அதில் தயாராகும் முதல் படத்தில் அமலா பால்தான் நாயகி என முடிவு செய்திருக்கிறாராம். தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை, படத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் நாயகி அமலா பால் என்பது மட்டும் உறுதி செய்திருக்கிறாராம்.

எல்லாம் அமலா பாலின் டெடிகேஷன்தான் காரணம்.

No comments:

Powered by Blogger.