Header Ads

அனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது!

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியில் நடந்தது. தற்போது சென்னை கிழக்கு கடற்கரைசாலையையை ஒட்டியுள்ள பாலவாக்கத்தில் நடந்து வருகிறது. கடந்த நான்கு நட்களாக இரவு நேரங்களில் ராட்சத ஜெனரேட்டர்கள் பல ஆயிரம் வாட்ஸ் கொண்ட மின் விளக்குகள், 300 பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. சாலையெங்கும் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாலும், ஜெனரேட் எழுப்பும் ஒலியாலும், சக்திவாய்ந்த மின் வெளிச்சத்தாலும் அந்த பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்தது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பல குடியிருப்போர் நலச் சங்கத்தினர் நீலாங்கரை போலீசில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீசார் படப்பிடிப்பபை நிறுத்தி கைது 3 பேரை கைது செய்துள்ளனர்.

"அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்ததாக போலீசார் கூறுகிறார்கள். அப்படியென்றால் தயாரிப்பாளர், இயக்குனர், லொக்கேஷன் மானேஜரைத்தானே கைது செய்திருக்க வேண்டும். புரொடக்ஷன் மானேஜர், லைட்மேன், லைட் மேன் உதவியாளர் என சம்பந்தம் இல்லாத அப்பாவிகளை கைது செய்துள்ளனர். அவ்வளவு பெரிய படப்பிடிப்பு போலீசுக்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. திடீரென்று கண்டுபிடிப்பது போல் கண்டுபிடித்து, கைது நாடகத்தை நடத்தினார்கள்" என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்தார்கள். (அருகில் இருப்பது பைல் படம்)

No comments:

Powered by Blogger.