Header Ads

தொகுப்பாளினிகளின் சம்பளம் கடும் உயர்வு!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள், அந்த நிகழ்ச்சிகளுக்கு சேனல்கள் வழங்கும் சிறிய சம்பளத்தை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளை சிரித்து சிரித்து தொகுத்து வழங்குகிறார்கள். ஆனால் அதே தொகுப்பாளினிகள் வெளியில் பொது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதற்கு வாங்கும் சம்பளம் தலையை சுற்ற வைக்கும். அதுவும் சமீபகாலமாக கணிசமாக அதனை உயர்த்தியும் விட்டார்கள்.

டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினியின்தான் இன்றைய தேதிக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறவர். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வாங்குகிறாராம். அடுத்த இடத்தில் பாவனா இருக்கிறார். இவர் 35 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ரம்யா 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாங்குகிறார். மற்ற தொகுப்பாளினிகளின் சம்பளம் 5 ஆயிரத்தில் தொடங்கி 20 ஆயிரம் வரை.

இந்த சம்பளம் சினிமா நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான். மற்ற கமர்ஷியல் நிகழ்ச்சிகள் என்றால் இன்னும் கூடுதலாக இருக்கும். காரணம் சினிமா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகாது. வெளியூர் நிகழ்சிக்கென்றால் சம்பளம் அப்படியே இரண்டு மடங்காகிவிடும். முதல் வகுப்பு கட்டணம், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல் இதெல்லாம் தனி சமாச்சாரம்.

ஒரு மாதம், அல்லது ஒரு வாரத்துக்கு முன்பே புக் செய்து 50 சதவிகித சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து விடவேண்டும். எந்த மாதிரி உடைகள் அணிய வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதற்குரிய உடைகளை கொடுத்துவிடவேண்டும், அவர்களே அணிந்து வந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும், உடன் வரும் உதவியாளர் மற்றும் மேக்அப்மென் சம்பளம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகளும் உண்டு. ஆண் தொகுப்பாளர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம்வரைதான் சம்பளம்.

No comments:

Powered by Blogger.