Header Ads

ரஜினி படத்தில் பிரிட்டன் நடிகை

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'லிங்கா' படத்தில் பிரிட்டன் நடிகை லாரன் ஜே இர்வின் நடித்துள்ளார். ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார்.சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.



இந்நிலையில் ரஜினியுடன் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்திருக்கிறார். இவர் ரஜினியுடன் நடித்த காட்சிகளை பெங்களூரில் படமாக்கியுள்ளனர். இரண்டு வாரங்கள் முழுக்க 'லிங்கா' படத்துக்காக லாரன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

வெளிநாட்டில் படித்த இன்ஜீனியர் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.1940ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் லாரன் ஜே இர்வின் நடித்த பகுதிகள் வருகிறதாம்.

லாரன் இர்வின் பிரிட்டிஷ் படம் 'ஹார்ட்', ஹாலிவுட் படம் 'வகரி', லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர்  என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Powered by Blogger.