Header Ads

ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட் வைத்த நடிகர் சந்தானம்

இம்மாதம் வெளியான படங்களில் யாமிருக்க பயமே படம்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். கோச்சடையான் படம் வெளியாவதை ஒட்டி பல படங்கள் பயந்து பின்வாங்கி வந்தநிலையில், தைரியமாக மே 9 அன்று யாமிருக்க பயமே படத்தை வெளியிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். முதலில் 250 தியேட்டர்களில் ரிலீஸானது யாமிருக்க பயமே. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு காரணமாக அடுத்தவாரமே மேலும் 55 தியேட்டர்களில் படத்தை திரையிடடனர். தற்போது சுமார் 300 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது யாமிருக்க பயமே.

இப்படம் வெளியான தினத்துக்கு அடுத்த தினம் சந்தானம் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியானது. யாமிருக்க பயமே படத்திற்குக்கு கிடைத்த மவுத் டாக்கில் சந்தானத்தின் படம் அமுங்கிப்போனது. அதுமட்டுமல்ல, அவரது ஹீரோயிஸமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. காமெடியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முதல் இரண்டு நாட்கள் தியேட்டர்களில் இருந்த கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. வசூலும் குறைந்துபோனது. அதைக் கண்டு அதிர்ந்துபோனார் சந்தானம். பொதுவாக எந்தப் படத்தில் நடித்தாலும் அப்படத்தின் பிரமோஷனுக்கு வரவே மாட்டார் சந்தானம்.

தன்னுடைய சொந்தப்படம் என்பதால் பிரமோஷனுக்கு வந்தவர் மீடியாக்கள் மத்தியில் படத்தைப் பற்றி மணிக்கணக்கில் முழங்கினார். ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கவில்லை. எனவே படத்தில் நடித்தவர்களை அழைத்துக்கொண்டு ஊர்ஊராக தியேட்டர் விசிட் அடித்தார். அப்படியும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.அந்தப் படத்தை தயாரித்த பிவிபி மற்றும் படத்தை வாங்கிய அனைவருக்கும் பல கோடிகள் நஷ்டத்தை எற்படுத்திவிட்டது - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதற்கிடையில் யாமிருக்க பயமே படக்குழுவினர் கடந்த ஞாயிறு அன்று மீடியாக்களை அழைத்து சக்சஸ் மீட் நடத்தினர். அதைக் கேள்விப்பட்ட சந்தானம் ஏறக்குறைய 12 நாட்களுக்குப் பிறகு நேற்று மீடியாக்களை அழைத்து சக்சஸ் மீட் வைத்தார்.

ஓடாத படத்துக்கு சக்சஸ்மீட் வைத்த நடிகர் இவர்தான்.

No comments:

Powered by Blogger.