Header Ads

கோச்சடையான் பற்றி ராம்கோபால் வர்மா விமர்சனம்: ரசிகர்கள் கொதிப்பு

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் நாளை (மே 23) உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழக மக்கள் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல தெலுங்கு மற்றும் இந்திப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் கோச்சடையானை விமர்சித்துள்ளார்.

"ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடைச்செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு பிரச்னையான அம்சமே அதுதான்" என்று எழுதியுள்ளார்.

ரஜினின் மார்பு பற்றிய இந்த விமர்சனம் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. ரஜினியின் அனிமேஷன் தோற்றம் ராம்கோபால் வர்மாவுக்கு பிடிக்காதது அவரது தனிப்பட்ட விஷயம். அதை ஏன் டுவிட்டரில் எழுதி அதுபோன்ற ஒரு பொதுகருத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் கொதிக்கிறார்கள். ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர் தோல்விகளில் இருக்கும் வர்மா கோச்சடையான் மூலம் மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

No comments:

Powered by Blogger.