Header Ads

பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர்: இது கேரள மாநில சோகம்

பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறையினரின் அடையாளமாய் மாறிப்போயிருக்கின்றன.

முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின். இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முகநூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு சம்பவம்

கேரள மாநிலம் எருவா, வேலாத்தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ்(32). முகநூலில் வினோதமான விஷயங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன்கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்தமானார்.

இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கிபோனார்.

அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும். அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கியுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது.

No comments:

Powered by Blogger.