Header Ads

கார்த்தியின் சிறுத்தை 2–ம் பாகம் தயாராகிறது

கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய சிறுத்தை படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. தமிழ் திரையுலகில் ஹிட்டான படங்களின் 2–ம் பாகத்தை எடுக்கும் பழக்கம் வேகமாக பரவுகிறது. சிங்கம் படத்தின் 2–ம் பாகம் தயாராகி வெற்றிகரமாக ஓடியது. 

அஜீத்தின் பில்லா படத்தின் 2–ம் பாகமும் வெளிவந்தது. தற்போது கமலின் விஸ்வரூபம் 2–ம் பாகம் தயாராகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படங்கள் வரிசையில் சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது.

சிறுத்தை 2011–ல் ரிலீசானது. இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். நாயகியாக தமன்னா நடித்தார். சிவா இயக்கினார். ரூ.13 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.40 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது சிறுத்தை படம் 2–ம் பாகத்தின் கதையை சிவா உருவாக்கி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதிலும் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார்.

No comments:

Powered by Blogger.