Header Ads

சிம்புவை முத்தமிட ரூ.50 லட்சம் கேட்ட தீக்ஷா சேத்

சிம்புவுடன் முத்தக்காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்டுள்ளாராம் நடிகை தீக்ஷா சேத்.
ராஜ பாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் தீக்ஷா சேத், இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது தமிழில் வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறார், இதில் சிம்புவும், தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று காட்சிகளை வைக்க இயக்குனர் விரும்பியுள்ளார்.

இதனால் தீக்ஷா சேத்தை அணுகி முத்த காட்சியில் நடிக்கும்படி கேட்டுள்ளனர், முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார்.

மேலும் முத்தக்காட்சிகளில் நடிப்பதற்காக மட்டும் ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம்.

சம்பளத்தை தவிர்த்து முத்த காட்சிக்கு மட்டும் அவர் ரூ.50 லட்சம் கேட்டாராம். கேட்ட தொகையை கொடுப்பதா? அல்லது முத்த காட்சி வேண்டாம் என விட்டு விடுவதா என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர்

No comments:

Powered by Blogger.