Header Ads

இளம் பெண்ணை கற்பழித்து நிர்வாண படங்களை இணையத்தில் வெளியிட்ட வாலிபரை பிடிக்க போலீஸ் வலை

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை கற்பழித்து நிர்வாண படங்களை இணையத்தில் வெளியிட்ட வாலிபரை பிடிக்க மணிப்பூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலம், தவ்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மேகாலயாவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அங்குள்ள மாணவியர் விடுதியில் தங்கியிருந்த அவர், அல்லம் ராஜக் மகாக்மயும் என்ற வாலிபரை உயிருக்குயிராக காதலித்தார்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அவர், கடந்த மாதம் துரா பகுதியில் உள்ள லாட்ஜுக்கு அவரை அழைத்து சென்றார். குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததில் அந்த மாணவி மயக்கமடைந்தார். அவரை நிர்வாணப்படுத்திய அல்லம் ராஜக் மகாக்மயும் தன்னிலை மறந்து கிடந்த இளம்பெண்ணை கற்பழித்தார்.

சமீபத்தில் கல்லூரி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அந்த இளம்பெண் தனது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். துரா லாட்ஜில் நிகழ்ந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறிய மாணவி தனக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து வேதனை அடைந்தார்.

அவரது பெற்றோர் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அல்லம் ராஜக் மகாக்மயுமை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.