Header Ads

காதலனை மணக்கிறார் மேக்னா? தந்தை அதிர்ச்சி

தமிழ் நடிகை மேக்னா ராஜ் கன்னட நடிகரை மணக்க உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்திருப்பவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கன்னட பட ஹீரோ சிரஞ்சீவி சர்ஜாவும் இவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மேக்னா ராஜின் தந்தையும் நடிகருமான சுந்தர்ராஜ் கூறும்போது,எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. 

அந்த விழாவில் சிரஞ்சீவி சர்ஜா பங்கேற்றார். இவரைப்போலவே இன்னும் பல்வேறு திரையுலக பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர். வீட்டு விழாவில் சர்ஜா பங்கேற்றதை வைத்து யாரோ வதந்தி பரப்பி உள்ளனர். மேக்னாவுக்கு இப்போது திருமணம் செய்துகொள்ளும் அவசரம் எதுவும் இல்லை. நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்துகிறார் என்றார். சுந்தர்ராஜ் இப்படி சொன்னாலும் மேக்னா- சிரஞ¢சீவி சர்ஜா காதல் வேகமாக வளர்ந்து வருகிறதாம். இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிவதாக சினிமா உலகை சேர்ந்தவர்கள் கூறி வ 

No comments:

Powered by Blogger.