Header Ads

தனுஷின் நாயகி காஜல் அகர்வால்

முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரவிருக்கிறார் காஜல் அகர்வால்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ புகழ் பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் படம் ‘வாய் மூடி பேசவும்’.

துலகர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் பாலாஜி மோகன்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பெயர், மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தனுஷ் இப்போது ‘அனேகன்’, ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் பால்கி இயக்கும் இந்திப் படம் என மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

No comments:

Powered by Blogger.