திருமணமான 15 நாளில் காதல் கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற புதுப்பெண் மீட்பு
திருமணமான 15 நாளில் காதல் கணவரை உதறிவிட்டு, கள்ளக்காதலனுடன் சென்ற புதுப்பெண்ணை போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
புதுப்பெண் மாயம்
நெல்லை மேலப்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்தவர், மைக்கேல்ராஜ். அவருடைய மகள் பிரியா (வயது 21). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே கடையில் வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவீட்டாரும் காதலை ஏற்றுக்கொண்டு மணிகண்டனுக்கும், பிரியாவுக்கும் கடந்த 7–ந் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து மணிகண்டன், தன்னுடைய காதல் மனைவி பிரியாவுடன் திருச்சிக்கு சென்றார். அதன் பிறகு மறுவீட்டுக்கு மேலப்பாளையம் வந்தனர். பின்னர் தன்னுடைய தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பிரியா சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. மாயமான புதுப்பெண் பிரியாவை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கள்ளக்காதலனுடன் மீட்பு
இது குறித்து பிரியாவின் தந்தை மைக்கேல்ராஜ் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், தாழையூத்து தெற்கு செழியநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்பவருக்கும், பிரியாவுக்கும் இடையே ரகசிய காதல் இருந்தது தெரியவந்தது. இதனால் சுரேஷ்தான், பிரியாவை அழைத்துச் சென்று இருப்பார் என்று கருதி போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கள்ளக்காதலன் சுரேசுடன் இருந்த பிரியாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை அழைத்து வந்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்கள்.
காதல் கணவர் மணிகண்டனுடன் வாழ பிடிக்கவில்லை என்று போலீசாரிடம் பிரியா கூறினார். சுரேசுடன் வாழ விரும்புவதாக கூறினார். போலீசார் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
No comments: