இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: கேமரூன் வரவேற்பு
இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேறியது. இதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வரவேற்றுள்ளார்.
மேலும், "மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற இத்தனை வருடங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய இலங்கை மக்களுக்கு இது ஒரு வெற்றி.
இலங்கை அரசு போர் குற்ற விசாரணை மீதான தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதன் விளைவாகவே இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. அதிபர் ராஜபக்சே சர்வதேச விசாரணை எனும் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையின் கடந்த கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என நம்புகிறேன். இந்த தீர்மானத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் பங்களிப்பு குறித்து பெருமிதமாக உள்ளது" என்றார்.
No comments: