மாயமான மலேசிய விமானம் தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பமானது; இதுவரை நடந்தது என்ன?
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தபட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமான பலி யானவர்களின் குடும்பத் திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க இருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் நிதிஉதவி வழங்குவ தாகவும் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து ,மலேசிய விமானத்தில் பயணம் செய்த 153 சின்ன விமானிகளின் உறவினர்கள் கோபம் அடைந்து பீஜிங்கில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மலேசிய அரசு கொன்று விட்டது. எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள் என காபமாக கோஷமிடடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
* மாயமான் மலேசிய விமானத்தில் 153 சீனர்கள்,38 மலேசிய பயணிகள்,7 இந்தோனேஷியர்கள்,6 ஆஸ்திரேலியன்,5 இந்தியர்கள், 4 பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள்,3 அமெரிக்கர்கள், 2 நியூசிலாந்து,உக்ரைம், கனடா நாட்டை சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ரஷ்யா,தைவான்,நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் தலா ஒருவர்,
* 2 நபர்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் இத்தாலியன் மற்றும் ஆஸ்திரியன் என போலி பாஸ் போர்ட்டில் பயணம் செய்து உள்ளனர்
மார்ச்-26
* கால நிலை சரியானதால் இன்று விமானங்களும் கப்பல்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.
* 6,22.000 சதுர மைல் (இங்கிலாந்தை விட 6 மடங்கு பெரியது) அளவில் தேடுதல் வேட்டை ந்டைபெறுகிறது.
* மன நிலை சரி இல்லாததால் தலைமை விமானியே விமானத்திற்கு விபத்து ஏற்படுத்தி இருக்க முடியும் என் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. நியூசிலாநது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
மார்ச் 25
இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா கைவிட்டது.மோசமான வானிலை காரணமாக தேடும்பணி நிறுத்தபட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.இந்த சூழ்நிலையில் தேடினால் தேடுதல் குழுக்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறபட்டு உள்ளது.
நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த விமானத் தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக் கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். ஏனெனில் அதற் கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்கா விடம் தான் உள்ளது.
அந்த கருவியின் உதவி யால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்காவின் 7-வது கப்பல்டை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மார்ச் 24:
இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தபட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனா அரசின் சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் "வெள்ளைநிறத்தில் சதுர வடிவிலான பொருளை சீன விமானம் இல்யூஷின்-76 கண்டுபிடித்து உள்ளது.என தகவல் வெளியிட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய விமானப்படை வேண்டுகோளின்படி, ஒரு ஆஸ்திரேலிய பைலட் சீனாவின் தேடுதல் வேட்டையில் சேர்த்து கொள்ளபட்டு உள்ளார்.
இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் வெள்ளி நிறத்தி லான இரண்டு பொருடகளை கண்டு பிடித்து உள்ளதாக அமெரிக்காவின் ஏ.பிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது
மார்ச் 23:
மாயமான மலேசிய விமானம் குறித்து பிரான்ஸ் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுள்ளதாகவும், அதில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெற்கு பகுதியில் செயலாற்றும் தன்மை கொண்ட பொருட்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது என்று போக்குவரத்து மந்திரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
8:30 சீன செயற்கைக்கோள் புதிதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிக பெரிய பொருள் கிடப்பதாக புகைப்படத்தில் காட்டியது.
இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் அதிகமான விமானங்கள் அங்கு சென்று தேடுவதற்கு அனுப்பப்பட்டு உள்ளன. இன்று தேடுதல் நடைபெறும் பகுதி பெர்த்தில் இருந்து தென்மேற்கில் 1,550 மைல்கள் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
எனினும், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இடையூறு ஏற்படும் வகையில் பலத்த காற்றும் மற்றும் அண்டார்டிகாவை சுற்றிலும் கிழக்கு நோக்கி அலைகள் நிற்காமல் வீசி செல்வதுமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய விமானங்கள் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அது வழக்கமாக பறக்க வேண்டிய ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மாறாக மேகம் சூழ்ந்த காரணத்தால் 450 அடி உயரத்திற்கு பறக்கும் சூழல் உள்ளது.
சூரிய வெளிச்சம் குறைவானதால் நீரில் பொருட்கள் ஏதும் இருக்கிறதாக என்பதை காண்பது கடினமான பணியாக உள்ளது. மங்கிய வானம் மற்றும் மங்கிய நீர்பரப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து தெளிவற்ற சூழலை தேடுதல் குழுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 22:
மிதக்கும் பொருள்
மலேசியாவின் போக்குவரத்து துறை மந்திரி ஹிசாமுத்தீன் உசைன் செய்தியாளர்கள் கூட்டத்தில் இன்று காலை பேசும்போது, மிதக்கும் பொருட்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை சீன தூதர் வைத்திருக்கிறார். அந்த பொருட்கள் தெற்கு பகுதியில் உள்ளன. அது குறித்து ஆய்வு மேற்கொள்ள அவர்கள் (சீனா) கப்பல்களை அனுப்புவார்கள் என்று கூறினார்.
அந்த மிதக்கும் பொருள் 22 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அவர், சூறாவளி வரும் வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி மிக சவாலாக உள்ளது. மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்ட கடற்பகுதியில் கடுமையான நீரோட்டங்கள் உள்ளன. சூறாவளி எச்சரிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிலியான் என்ற பருவகால சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளது என்றும் உசைன் தெரிவித்து இருந்தார்.
11:30 ஆஸ்திரேலியாவின் பிரதமர் (பொறுப்பு) வாரன் டிரஸ் கூறும்போது, தேடுதல் விமானங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் உள்ளன. அவற்றின் பணிகள் அனைத்தும் நேரடியாக பார்க்கும் வகையில் இருக்கும் என்றார்.
செயற்கைக்கோள் படத்தில் காணப்பட்ட பொருட்கள் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் போய் சேர்ந்திருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் மற்றொரு சுற்று தேடுதல் பணியில் விமானங்கள் ஈடுபடு தொடங்கியுள்ளன. இரண்டு வாரங்களாக மாயமான விமானம் குறித்த சர்ச்சைக்கிடையே பணி தொடர்கிறது.
இந்த பணிக்காக 6 விமானங்களை ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது. அவை 5 மணிநேரத்தில் தேடுதலை நடத்தும் திறன் வாய்ந்த விமானங்கள் ஆகும்.
மார்ச் 21:
வான்வழியே ஆன அடுத்த நாளின் தேடுதலிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு விமானம் நிலையாக மற்றும் சீராக பயணித்துள்ளது என்பதை செயற்கைக்கோளின் இன்மார் சாட் (ஐசாட்) புகைப்பட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 20:
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் பொருட்கள் கிடப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை தொடர்ந்து வான்வழி மற்றும் கடற்பரப்பு வழியேயான தேடுதல் பணி இந்திய பெருங்கடலின் உள்ளடங்கிய பகுதி நோக்கி நீண்டது.
புகைப்படங்கள் மார்ச் 16ல் எடுக்கப்பட்டு இருந்தது. 4 நாட்களை கடந்தும் தேடுதல் பணியினரால் எந்த சிதைவு பொருட்களையும் சென்றடையவில்லை.
மார்ச் 19:
கடந்த பிப்ரவரி 3ந்தேதியில் விமானியின் வீட்டில் இருந்த விமான இயக்கும் கருவியில் தகவல் நீக்கப்பட்டது தொடர்பான தற்பொழுது நடைபெறும் விசாரணையில் மலேசியாவுடன் அமெரிக்காவின் எப்.பி.ஐ. இணைந்து கொண்டது.
விமான எரிபொருள் இருப்பு குறித்த விசாரணையால் இந்திய பெருங்கடல் பகுதியில் சோதனை நடத்துவது எளிதானது.
மார்ச் 18:
நவீன விமான போக்குவரத்து வரலாற்றில் நீண்ட நாட்களாக கண்டறியப்படாத ஒன்றாக மாயமான மலேசிய விமானம் மாறி போனது.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா உடன் அமெரிக்கா இணைந்து தேட தொடங்கியது. கலிபோரினியாவை போன்று ஒன்றரை மடங்கு பெரிய பரப்பளவில் தேடும பணி நீண்டது.
மார்ச் 17:
ஆஸ்திரேலியா இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதலை நடத்தியது. சட்ட அமலாக்க பிரிவினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.
விமானி தற்கொலை சாத்தியம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். விமான பொறியாளர் பயணம் செய்ததை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மார்ச் 16:
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்ட பின் 7 மணிநேரம் விமானம் இயங்கியுள்ளதாக செயற்கைக்கோள் சிக்னல்கள் தெரிவித்தன.
இதனை அடுத்து தேடுதல் குழுவினர் தங்கள் பணியினை இந்திய பெருங்கடல் பகுதிக்கு மாற்றினர்.
மார்ச் 15:
ஆஸ்திரேலிய பகுதியை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் சென்றதாக செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றங்கள் வழியே கண்டறியப்பட்டது.
விமானிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. விமானம் உள்நோக்கத்துடன் திசை திருப்பப்பட்டு உள்ளது என்று புதிய தகவல் தெரிவிப்பதாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
மார்ச் 14:
மலேசிய அரசு விமானிகள் மீது சந்தேக பார்வையை செலுத்தியது. அதேவேளையில், தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக பிரதமர் நஜீப் ரசாக் தனது கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாடுகளுக்கான பயணத்தை தள்ளி போட்டார்.
மார்ச் 13:
ரேடார் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் பாதை மாறி சென்றதாக கிடைத்த சான்றை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் சிதைவுகள் குறித்து தேடுதல் பணி மாறியது.
தென் சீன கடல் மற்றும் தாய்லாந்து வளைகுடா இடையே மிதக்கும் பொருட்கள் இருப்பதாக சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டின. அவை விமான பாகங்கள் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்தது.
மார்ச் 12:
கடத்தல் நடந்திருக்கும் என்பதன் அடிப்படையில் குற்ற விசாரணை நடைபெறுவதாக மலேசியா கூறியது.
ஆனால், கடைசி சிக்னலுக்கு அடுத்து விமானம் மேற்கு நோக்கிய திரும்பியது என்றும், மலேசிய அரசு தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் வியட்நாம் கூறியது.
மார்ச் 11:
வியட்நாம் கடற்கரை பகுதியில் விமான சிதை பொருட்கள் கிடக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டது.
திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தவர்களால் தீவிரவாத செயல் நடக்கவில்லை என்று மலேசியா மற்றும் இண்டர்போல் அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 10:
தெற்கு சீன கடல் வரை தேடுதல் பணியை மலேசிய அரசு விரிவுபடுத்தியது. ஹாங்காங் அருகே விமான சிதைவு பொருட்கள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து கப்பல்களையும் அனுப்பியது.
வியட்நாம் தேடுதல் குழுவினர் உடைந்த ஜன்னல் பகுதியை வானில் இருந்து பார்க்கின்றனர். ஆனால் அதில் பலனில்லை. வியட்நாம் ஹெலிகாப்டர் குழுவினர் கண்டறிந்த மஞ்சள் நிற பொருளை தொடர்ந்து சென்று அடைய முடியவில்லை.
மார்ச் 9:
தாய்லாந்து வளைகுடா பகுதியில் சில பொருட்கள் கிடப்பதை வியட்நாம் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால், விமானம் 370 உடன் தொடர்பில்லாத பொருட்கள் என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய பிரதிநிதிகள், மத்திய விமான நிர்வாகம் மற்றும் போயிங் பிரதிநிதிகள் விசாரணைக்கு உதவ மலேசியா புறப்பட்டு சென்றனர். விமானம் பாதை மாறி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 8:
8:11 விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கான கடைசி சிக்னல் கண்டறியப்படுகிறது. ஒரு வாரம் வரை இத்தகவல் வெளியிடப்படவில்லை.
திருட்டு பாஸ்போர்ட்டில் இரு பயணிகள் விமானத்தில் சென்றது கண்டறியப்பட்டதால், தீவிரவாத செயல் நடைபெற்றிருக்க கூடும் என கருதப்பட்டது.
7:39 மலேசிய விமானத்திற்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் சின்ஹ§வா செய்தி கழகம் தகவல். விமானத்தில் 3ல் இரு பங்கினர் சீன பயணிகள்.
6:30 பீஜிங் நகருக்கு விமானம் 370 சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
2:15 மலேசிய தீபகற்பத்திற்கு மேற்கு பகுதியில் விமானம் ஒன்று இருப்பதை மலேசிய ராணுவ ரேடார் கருவி கண்டறிகிறது. ஒரு வாரம் வரை இத்தகவல் வெளியிடப்படவில்லை.
1:37 அடுத்த அகார்ஸ் தகவல் வரவேண்டும். ஆனால் வரவில்லை.
1:21 ரேடார் தகவல் நிறுத்தப்பட்டது.
1:19 விமானி அறையில் இருந்து கடைசி தகவல். உதவி விமானி, அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் என்று இறுதியாக பேசினார் என்று ஆரம்ப கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
விமானம் மலேசிய வான்பரப்பில் இருந்து விலகி தாய்லாந்து வளைகுடா பகுதிக்கு மேலே வியட்னாம் நோக்கி பயணிக்கிறது.
1:07 அக்ரோனிம் அகார்ஸ் என்ற தகவல் அனுப்பும் கருவி வழியே போயிங் ரக 777-200ஈ.ஆர். விமானத்தின் கடைசி தகவல் பரிமாற்றம்.
12.41 மலேசிய விமானம் 239 பயணிகள் மற்றும் விமானிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது.
No comments: