Header Ads

சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.




வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.இந்த ஆவணப்படம், தமிழர்களின் பெற்றோர்களுடைய கலாச்சார பராம்பரிய கட்டுப்பாடு மற்றும் கட்டுக்கோப்புகளைக் காணும் தமிழ் பிள்ளைகள், வாலிப வயதினர் சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய முற்றிலும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கண்டு வியந்து அதன்மேல் ஆவல் கொண்டுள்ளனர் என்று 22 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி லாவண்யா சின்னத்துரை அவர்கள் கூறியுள்ளார்,

சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்க்கின்றனர், ஜாதி, மதம், மொழி தொடர்பில் திருமணத்தை வெறுக்கின்றனர். இதனால் இளைய சமுதாய புதிய தலைமுறையினர் பெற்றோர்களை திருப்திபடுத்த கட்டுப்பாடான வாழ்க்கையையும், தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான மேற்கத்திய ஜரோப்பிய கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.

No comments:

Powered by Blogger.