ஜெனிவா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர்! – ஐநாவிலிருந்து 7 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வரும்! -
இலங்கைப் போர் 25 வருடங்கள் தொடர்ந்த ஒன்று. அதன் இறுதி மாதங்களில் நாற்பதினாயிரம் பேர் வரை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது.
அந்தப் போரில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விசாரணையும் தமது நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
நீண்ட இலங்கைப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுத் தீர்மானம் தீர்வு தருமா?
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
நாங்கள் பல தடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது
இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது.
அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையொன்றை வேண்டி நிற்கிறது.
இலங்கை மீது சர்வதேசம் இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
No comments: