Header Ads

விஜய்- முருகதாஸ் படத்தின் டைட்டில் கத்தி!..

ஐங்கரன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

'வாள்', 'அடிதடி', 'தீரன்'  என்று படத்துக்கு பல்வேறு டைட்டில்கள் வைத்ததாக சொல்லப்பட்டது.  ஆனால், இப்போது படத்தின் டைட்டில் 'கத்தி' என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏ.ஆர்.முருகதாஸ் இதை தன் ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

'கத்தி' படத்தின் ஷூட்டிங் மட்டும் விறுவிறு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்துவிட வேண்டுமென்று வெகுவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.