20 ஓவர் உலகக்கோப்பை: இந்தியா எளிதில் வெற்றி...
வங்கதேசத்தில் இன்று நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 6 ரன்னிலும் ரஹ்மான் ரன் ஏதுமின்றியும் ஷகிப் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அனுமால் ஹக் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் சீரான இடைவெளியில் வங்கதேசத்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
முடிவில் அந்த அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும் அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் ஷர்மாவுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆட்டத்தின் கடைசிப்பகுதியில் ரோகித் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டோனி இரு சிக்சர்கள் விளாசினார். முடிவில் இந்திய அணி 18.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்ற கோலி 57 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது.
No comments: