விமானம் விழுந்து நொறுங்கியது : அரியானா ஆளுநர் தப்பினார்
சண்டிகர்: அரியானாவில் நேற்று அரசு விமானத்தில் தீ ஏற்பட்டது. பெரும் விபத்தில் இருந்து அரியானா ஆளுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அரியானா மாநிலம் சண்டிகரில் இருந்து நேற்று காலை, ஆளுநர் ஜெகன்நாத் பகாடியா, அவரது மனைவி சாந்தி உள்ளிட்ட 10 பேர் டெல்லிக்கு அரசு விமானத்தில் கிளம்பினர். விமானம் 30 அடி உயரத்தில் மேலெழும்பும் போது அதன் இன்ஜினில் இருந்து தீப்பிடித்து புகை வந்தது. இதனால், கோளாறு ஏற்பட்டு இன்ஜின் செயல் இழக்கத் தொடங்கியது. இதையடுத்து, விமானத்தை பைலட் பத்திரமாக தரையிறக்க முயன்றார். ஆனாலும் விமானம் கீழே விழுந்தது.
அதில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. விமானம் தீப்பற்றியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் தரை இறக்கப்பட்டவுடன் ஆளுநர் ஜெகன்நாத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் சென்ற குழுவில் பாதுகாவலர்களுடன் மருத்துவர் ஒருவரும், பணியாளரும் இருந்தனர். விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து இந்திய விமான நிறுவனம் விசாரணை செய்து வருகிறது. விமானம் தீப்பிடித்ததை அடுத்து விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
No comments: