விமானம் விழுந்து மூழ்கியதாக கருதப்படும் பகுதியில் 300 மிதக்கும் பொருட்கள் செயற்கைக்கோள் படங்கள்
மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை மாயமானது. இந்த விமானத்தை பல்வேறு நாடுகளின் கப்பல்களும், விமானங்களும் தேடி வரும் நிலையில், விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியதாக, கடந்த திங்கட்கிழமை மலேசியா அறிவித்தது.
இந்த நிலையில் விமானம் விழுந்து மூழ்கியதாக கருதப்படும் பகுதியில், சுமார் 2 மீட்டரில் இருந்து 15 மீட்டர் நீளம் வரையிலான 300 பொருட்கள் மிதப்பதை தாய்லாந்து செயற்கை கோள் படம் பிடித்துள்ளது. இந்த பொருட்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்காக 2,700 கிலோ மீட்டர் தொலைவில் மிதப்பதாக ஜியோ இன்பர்மேடிக்ஸ் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவை விமானத்தில் உடைந்த பாகங்கள் தானா என்று உறுதிபடுத்தப்படவில்லை. மேலும், புகைப்படங்கள் குறித்தான தகவல்கள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments: