படப்பிடிப்புக்கு தாமதம்: நயன்தாராவுடன் டைரக்டர் மோதல்?
இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரு மொழிகளிலும் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தை அவர் ஏற்று நடிக்கிறார்.
இப்படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘லீடர்’ படத்தை டைரக்டு செய்தவர். சிறந்த டைரக்டருக்காக நிறைய விருதுகள் வாங்கியுள்ளார். ஆந்திராவில் இவரை முன்னனி டைரக்டராக கொண்டாடுகிறார்கள்.
நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கில் மார்க்கெட் உள்ளதால் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் கதையை மாற்றும்படி டைரக்டரிடம் நயன்தாரா நிர்ப்பந்தித்தார். ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் வந்தார். தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா அடம் பிடித்ததால் கேரக்டரை டைரக்டர் மாற்றியதாக கூறப்பட்டது. கர்ப்பிணியாக இல்லாமல் சாதாரணமாகவே இதில் அவர் நடிக்கிறார்.
படப்பிடிப்புக்கும் நயன்தாரா தினமும் தாமதமாகவே வந்ததாக படக்குழுவினர் கூறுகின்றனர். இதனால் டைரக்டர் கடும் கோபமானாராம். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். டைரக்டர் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்ததாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
No comments: