காதலி மீது ஆசிட் வீச கூலிப்படையை அனுப்பிய வக்கீலுக்கு 20 ஆண்டு ஜெயில்
இத்தாலியை சேர்ந்தவர் லூகாவரானி (37). வக்கீல் ஆக இருக்கிறார். இவரது முன்னாள் காதலி லூசியா அன்னிபாலி. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி காதலித்தனர்.
அப்போது தான் லூகாவரானி ஏற்கனவே திருமண மானவர் என்பதும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. எனவே, அவருடன் தகராறு செய்து விட்டு லூசியா அன்னிபாலி பிரிந்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வக்கீல் லூகாவரானி காதலி லூசியா மீது ஆசிட் வீச அல்பேனியாவை சேர்ந்த ரூபின் தலபான், அல்டிஸ்டின் பிரீசெபாய் ஆகிய 2 பேரை கூலிக்கு அமர்த்தினார்.
அவர்கள் காரில் வந்த லூசியா மீது ஆசிட் வீசினர். அதில் அவரது முகம் கருகியது. அதை தொடர்ந்து வக்கீல் லூகா வரானி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ரோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் காதலி மீது ஆசிட் வீச கூலிப்படையை அமர்த்திய வக்கீல் லூகாவரானிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கூலிப்படையை சேர்ந்த ரூபின், அல்டிஸ்டின் ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் தலா 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
No comments: