Header Ads

திலீப் 2–ம் திருமணம்: காவ்யா மாதவனை மணக்கிறார்

நடிகை காவ்யா மாதவனை திலீப் 2–ம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் (ஜூன்) 25–ந்தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை பொருத்தமான ஜோடி என கேரள ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். இரண்டு பேருமே திருமண பந்தத்தை முறித்துள்ளனர்.

திலீப் மலையாள நடிகை மஞ்சுவாரியரை மணந்து குடும்பம் நடத்தினார். தற்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள். விவாகரத்து கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோல் காவ்யா மாதவனும் கணவனை பிரிந்துள்ளார். சினிமாவிலும் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மலையாள பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். காவ்யா மாதவனின் பெற்றோரும் திலீப்புக்கு மகளை மணமுடித்து வைக்க சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.

No comments:

Powered by Blogger.