Header Ads

அஞ்சானில் சூர்யாவின் அதிரடி பஞ்ச் டயலாக்!

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. அவர் படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரி குவித்தது. அதோடு, ரஜினியிடத்தில் நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்று கேட்டால், அதில் முதல் படமாக பாட்ஷாவைத்தான் சொல்வார். அந்த அளவுக்கு அவருக்கும் இது அதிகம் பிடித்த படங்களில் ஒன்று.

அப்படிப்பட்ட பாட்ஷா படத்தை தழுவிய கதையில்தான் இப்போது சூர்யாவின் அஞ்சான் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மும்பையை மையமாகக்கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பாட்ஷாவில் ரஜினி பேசிய, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற பஞ்ச் டயலாக்கைப்போன்று அஞ்சான் படத்தில் சூர்யாவும் ஒரு டயலாக்கை அடிக்கடி பேசுகிறாராம். அந்த டயலாக் என்னவெனில், நான் சாகுறதா இருந்தாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும், அதேசமயம் நீ சாகுறதா இருந்தாலும் அதையும் நான்தான் முடிவு பண்ணனும் என்பாராம். இந்த டயலாக் படத்தில் பல இடங்களில் இடம்பெறுகிறதாம்.

No comments:

Powered by Blogger.