Header Ads

டைரக்டர்களை சீண்டும் பரோட்டா சூரி!


சந்தானம் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தது வரை சூரியால் பெரிய அளவில் வளர முடியவில்லை. இரண்டாம்தட்டு, மூன்றாம் தட்டு நடிகர்களுடன்தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது சந்தானம், ஹீரோவாகி விட்டதால், இனி தான் ரவுணடு கட்டி அடிக்கலாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு திரிகிறார் சூரி.

இந்த நிலையில், விமல், சிவகார்த்திகேயன் போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களிலும் நடிக்கும் சூரி, அந்த படங்களில் தானும் ஹீரோக்களுக்கு இணையாக அதிகப்படியான காட்சிகளில் வர வேண்டும் என்று டைரக்டர்களிடம் கண்டிசனாக பேசுகிறார். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்தே தனக்கான காமெடி வசனங்களை தானே டைரி போட்டு எழுதத் தொடங்கியிருக்கும் சூரி, டைரக்டர்கள் தனக்காக எழுதிய காமெடிகளை தவிர்த்து விட்டு தனக்குத்தானே எழுதி பேசுகிறாராம்.

சில சமயங்களில் அதற்கு டைரக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தால், இந்த விசயத்தை அப்படங்களின் தயாரிப்பாளர்களிடம் பத்த வைத்து அவர்களுக்கே வேட்டு வைத்து விடுகிறாராம். அந்த வகையில் சமீபத்தில் விமலுடன் நடித்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தின் டைரக்டர் ஆர் கண்ணன் கொடுத்த வசனங்களில் காமெடியே இல்லை என்று சொல்லி, மொத்த காமெடி காட்சிகளையும் தானே உருவாக்கி இணைத்து விட்டாராம் சூரி.

தற்போது சூரிக்கு ஓரளவு மார்க்கெட் இருப்பதால், அவர் சொல்வதற்கெல்லாம் தயாரிப்பாளர்களும் தலையாட்டுகிறார்களாம். இதனால் சூரியை வைத்து படம் பண்ணும் டைரக்டர்கள் அல்லோல்பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.