அங்குசம் பட இயக்குனருக்கு அடி–உதை
அங்குசம்’ படத்தை டைரக்டு செய்தவர் மனுகண்ணன். தகவல் அறியும் உரிமை சட்டத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீசானது.
அமிஞ்சிகரையில் உள்ள தியேட்டரில் படம் திரையிடப்பட்டு உள்ளதை பார்ப்பதற்காக மனுகண்ணன் காரில் சென்றார். அமிஞ்சிகரையில் உள்ள பாங்கி ஏ.டி.எம். மையத்தில் காரை நிறுத்தி விட்டு பணம் எடுப்பதற்காக சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம ஆசாமிகள் மனுகண்ணனை திடீர் என்று தாக்கினார்கள். சுற்றி நின்று அடித்து உடைத்தனர். பிறகு ஆங்கிருந்து மோட்டார் சைக்கிளிலேயே பறந்து விட்டனர். மனுகண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

No comments: