கோச்டையான் இடத்தை பிடித்தார் சந்தானம்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இன்று ரிலீஸ்
சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை அவரது ஹோம்மேட் பிலிம்ஸ் நிறுவனமும், பி.வி.பி சினிமாவும் இணைந்து தயாரித்திருந்தது. படத்துக்கு சென்சார் சர்ட்டிபிக்கேட் கிடைத்த மறுநாளே ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை வாங்கிவிட்டது. நல்ல விளம்பரத்துடன் வருகிற 16ந் தேதி படத்தை வெளியிட ஸ்டூடியோ கிரீன் தீர்மானித்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில்தான் நேற்று (மே 9) ரிலீசாக வேண்டிய கோச்சடையான் படம் எதிர்பாராதவிதமான மே 23ந் தேதிக்கு தள்ளிப்போனதையொட்டி சந்தானத்திற்கு அடித்தது யோகம். கோச்சடையானுக்காக ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் காலியாக இருந்தது. திரையீட்டு தொழிலில் கில்லாடியான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கோச்சடையானுக்கு ஒதுக்கிய தியேட்டர்களில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை திரையிடுகிறது.
பிரிண்டுகள் தயாராக ஒரு நாள் எடுத்துக் கொண்டு இன்று அனைத்து கோச்சடையான் தியேட்டரிலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை வெளியிடுகிறது. இதற்காக வினயல் போர்டுகள், விளம்பர தட்டிகள், கட்அவுட்கள், சுவரொட்டிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என அனைத்து பணிகளும் முழு வீச்சில் கடந்த இரு தினங்களாக நடந்தது.

No comments: