Header Ads

அமலாபால் வெளியே...! அமலா உள்ளே...!!

வீரசேகரன், சிந்து சமவெளி என்ற சிறு படங்களில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் பிரபலமாகி, தெய்வதிருமகள் படத்தின் மூலம் கமர்ஷியல் நடிகையான அமலாபாலின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அறிமுகமான இரண்டு வருடத்திற்குள் விஜய்யுடன் ஜோடியாக நடித்தார். வந்த வேகத்திலேயே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார். விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடவும் இருக்கிறார்.

அவர் போனால் என்ன. அதே மலையாள தேசத்திலிருந்து இன்னொரு அமலா வருகிறார். வெற்றிவேலா என்ற படத்தின் ஹீரோயின். "யாருடைய பெயரையும் வைத்துக் கொண்டு குறுக்கு வழியில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ரசிகர்களை நம்பி நடிக்க வந்திருக்கிறேன். என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். நான் பெயரை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருந்தேன். படத்தின் இயக்குனர் பிரபுராஜா என்னுடைய ஒரிஜினல் பெயரான அமலா என்பதையே வைத்துக் கொள்ளச் சொன்னார். எனக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடிக்கிறார். புகழ் பெற்ற எல்லோரும் சின்ன படத்திலிருந்துதான் கேரியரை தொடங்கியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் தொடங்கியிருக்கிறேன். என்கிறார் புது அமலா.

No comments:

Powered by Blogger.