வன்னியில் பல இலட்சம் சுருட்டி பெண்ணின் ஆதாரம் அம்பலம்! கண்ணீரில் பலர்…video
மோசடி ராணி உதயகலா குறித்த பல்வேறு தகவல்களும் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இலண்டன் அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட உதயகலா பாதிக்கப்பட்ட சிலருடன் ஆரம்பத்தில் கைத்தொலைபேசியில் உரையாடிய சில பதிவுகள் பெறப்பட்டுள்ளன. இலண்டன் தூதரகத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவுடன் உதயகலா, பரந்தனைச் சேர்ந்த சிவா என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
அப்போது தொலைபேசியில் உதயகலா கதைத்த போது கொழும்பில் உள்ள இலண்டன் தூதரகத்துக்கு அருகாமையில் உள்ள கொமர்சல் வங்கிக்கு சென்று மூன்று இலட்சம் ரூபாவினை போடுமாறு கூறிய வேளை ஒலிப்பதிவு செய்யப்பட்ட விடயங்கள் அங்கே தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: