Header Ads

பிளஸ் 2 தேர்வுக்கூடத்தில் மாணவிக்கு செக்ஸ் தொந்தரவு

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகளின் உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்வு  2 ஆயிரத்து 242 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.

தேர்வைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் 4000 பேரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், ராசிபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் முத்துக்குமார் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. அந்த மாணவியை விரும்புவதாக கூறிய ஆசிரியர், தன்னை திருமணம் செய்ய தயாரா? என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலால் தேர்வு எழுத முடியாமல் வேதனை அடைந்ததாக கூறிய அந்த மாணவி, மேலதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Powered by Blogger.