Header Ads

ஆட்டோ டிரைவர் கொலையில் பரபரப்பு நாங்கள் கொன்றோம் எனக்கூறி 50 பேர் காவல்நிலையத்தில் கோஷம் கருத்துகள்

சென்னை: தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கொலையில், உண்மையான கொலையாளிகளை காப்பாற்றும் வகையில் 50 ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தானாக வந்து, நாங்கள்தான் கொலை செய்தோம். எங்களை கைது செய்யுங்கள் என்று கூறியதால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனினும் தீவிர விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தமன் (28). இவர், டைடல் பார்க் ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அப்பகுதி ஆட்டோ டிரைவர்களிடம் அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, அதே ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர் கண்ணையாவுக்கும், புருஷோத்தமனுக்கும் சண்டை நடந்துள்ளது. அதன்பின் அங்கி ருந்து சென்ற புருஷோத்தமன், அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்தார். 

அப்போது ஆட்டோ வில் வந்த சிலர் புருஷோத்தமனை அடித்து இழுத்து சென்றனர். பெருங்குடி ஏரிக்கரை அருகில் வைத்து முகத்தில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதைதொடர்ந்து டைடல் பார்க் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று முன்தினம் இரவு தரமணி காவல் நிலையம் வந்து புருஷோத்தமனை நான்தான் கொலை செய்தேன் என்று தனித்தனியாக கூறினர். ரஜினி நடித்த பாட்ஷா பட பாணியில் 50 ஆட்டோ டிரைவர்கள், ஒரே மாதிரி வாக்குமூலம் அளித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் எழுத்து பூர்வமாக எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. இதனால், உண்மையான கொலையாளி யார் என்று போலீசா ருக்கு குழப்பம் ஏற்பட்டது.எனினும் காவல் நிலையத்துக்கு வந்த அனைத்து ஆட்டோ டிரைவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை வாங்கினர். 

பின்னர், தனித்தனியாக விசாரணை நடந்தது. அப்போது, உண்மையான கொலையாளிகளான திருவான்மியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (41), சக்திவேல் (28), பாஸ்கர் (39), கருப்புசாமி (31), ஜான் ஆம்ஸ்ட்ராங் (37), காசி (44), செல்வம் (47), தன்ராஜ் (37), சரவணன் (28), முருகன் (32) ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “புருஷோத்தமன் அடிக்கடி குடித்து விட்டு வந்து ஆட்டோ டிரைவர்களிடம் தகராறு செய்வார். பணம் வாங்குவார். கடந்த 2011ம் ஆண்டு, தரமணியை சேர்ந்த யுவராஜ் என்ற ஆட்டோ டிரைவரையும், 2012ல் குமார் என்ற பெயின்டரையும் கொலை செய்தார். இதனால் அவர் மீது எங்களுக்கு பயம் இருந்தது. நேற்று முன்தினம் புருஷோத்தமன், எங்களிடம் தகராறு செய்தார். அப்போது அவரை பிடித்து கழுத்தை மின்வயரால் இறுக்கினோம். பிறகு ஆட்டோவில் ஏற்றி பெருங்குடி ஏரிக்கரைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.