பிரிட்டன் புகார் மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க இலங்கை முன்வரவில்லை...
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவனீதம் பிள்ளை அளித்த அறிக்கையின் மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும், பாதிக்ப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு நடைபெற வேண்டும் என்பதில் பிரிட்டன் ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேரில் ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நவனீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசு விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். வெளிநாட்டு உதவிகள், ஐ.நா.வின் ஆலோசனைகளை இலங்கை அலட்சியப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். உள்நாட்டு போரில் நடந்த மனித உ£மை மீறல்களை நியாயப்படுத்தும் போக்கு அண்மையில் இலங்கை தலைவர்களின் பேச்சில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து-ள்ளார்
No comments: