Header Ads

அமெரிக்காவில் கணவரை கொன்றதாக இந்திய பெண் மீது வழக்கு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா பட்டேல்(27) என்ற பெண், 2012-ம் ஆண்டு தனது கணவர் பிமால் பட்டேலுக்கு மசாஜ் செய்வதாக கூறி பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு கணவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த பிமால் பட்டேல்(29) சான் அன்டோனியோ ராணுவ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் 5 மாதங்களுக்குப்பிறகு, 2012 ஏப்ரல் 17ல் இறந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஸ்ரேயாவிடம் கடந்த 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 

அப்போது, ஸ்ரேயா தன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். மரபணுவியல் நிபுணர்கள் நேற்று சாட்சியத்தை வழங்கினர். அவர்கள் கூறுகையில், ஸ்ரேயா பட்டேலின் கைரேகைகள் பெட்ரோல் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கொண்ட 10 காலன் வெள்ளை வாளியில் பதிந்திருந்தாக தெரிவித்தனர். 

சாட்சிகளிடம் விசாரித்தபோது, தெளிப்பான்களை மறைப்பதற்கு அவற்றை பயன்படுத்தியதாக கூறினர். கடந்த மாதம் வரை அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் சோதனை நடத்த சொல்லவில்லை என்றும், டி.என்.ஏ. ஆதாரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது என்றும் தடவியல் நிபுணர்கள் கூறினர். 

இந்நிலையில், நீதிபதி டேவிட் க்ரெயின் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாராணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரேயாவின் வழக்கறிஞர் வாதத்தை தொடங்கினார். கணவர் தனது உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதுடன், காப்பாற்றும்படி ஸ்ரேயாவிடம் கூறியதாக வக்கீல் தெரிவித்தார். 

ஸ்ரேயா பட்டேல் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பரோலில் வெளிவரமுடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம்.

No comments:

Powered by Blogger.