மாயமான மலேசிய விமானம் மூழ்கியது என்பதற்கான ஆதாரங்களை கேட்கும் சீனா
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவும், சீனாவும் 3 மர்ம பொருட்களை கண்டுபிடித்துள்ளன. இப்பொருட்களை ஆஸ்திரேலிய கப்பல்கள் நெருங்கியுள்ளன. அதே நேரத்தில், மலேசிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று உறுதி செய்துள்ளார். நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘விமானம் எம்எச்-370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்பதை ஆழ்ந்த சோகத்துடன் உறுதி செய்கிறேன். பிரிட்டன் செயற்கைகோள் அனுப்பிய தகவலின் அடிப்படையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். -
ஆனால் சீன அரசு அதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு மலேசியாவிடம் கேட்டுள்ளது.விமானம் கடலில் விழுந்து மூழ்கியது என்று தீர்மானித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் தங்களிடம் அளிக்குமாறு மலேசியாவிடம் சீன துணை வெளியுறவுத் துறை அமைசச்ர் ஜீ ஹாங்ஷெங் கேட்டுள்ளார். மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் சீனர்கள். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தவுடன் சீன பயணிகளின் உறவினர்கள் கதறி அழுதனர்.
முன்னதாக தெற்கு இந்திய பெருங்கடலில் பொருட்கள் கிடப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் பார்த்த சீன பயணிகளின் உறவினர்கள் அதை நம்ப மறுத்தனர். மாயமான விமானம் கடலில் மூழ்கவில்லை என்றும், தங்களின் உறவினர்கள் உயிருடன் இருப்பதாகவும் நம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: