விஜய்யின் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைப்பு: ஆம் ஆத்மியில் இணைந்த நிர்வாகிகள்..
இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இளைய தளபதி விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.
மேலும் அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. பண நாயகம் தான் உள்ளது. இவை எல்லாவற்றையும் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பல முறை தபால் மூலம் தகவலை கொண்டு சென்றும் பலன் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் தாராபுரம் விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் ஜாபர் சாதிக், நகர துணைத் தலைவர் ஜூபேர், நகர இளைஞரணி தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, ஒன்றியத் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், இயக்க தொண்டர்களும் இயக்கத்தை முழுமையாக கலைத்துவிட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சின் தமிழக பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துள்ளார்கள்.
No comments: