கலைக்கப்பட்ட அஜீத் ரசிகர் மன்றத்துக்கு மீண்டும் அனுமதியா?
கலைக்கப்பட்ட ரசிகர் மன்றம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவது குறித்து அஜீத் ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அஜீத் தனது ரசிகர் மன்றங்களை 2011–ல் திடீரென கலைத்தார். அதற்கு முன்புவரை இந்த மன்றங்கள் மூலம் சமூக சேவை பணிகள் செய்தார். மரக்கன்றுகள் நடவைத்தார். ரத்த தானம், ஏழைகளுக்கு உதவிகளும் செய்ய வைத்தார். ஆனால் ரசிகர்கள் சிலர் மன்ற விதிகளை மீறி அரசியலில் ஈடுபட துவங்கினர். ரசிகர் மன்ற கொடிகளுடன் சென்று தேர்தலில் விரும்பிய கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கவும் துவங்கினர். அஜீத்தும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இதனால் ஆத்திரமுற்று ரசிகர் மன்றத்தை அஜீத் கலைத்தார். அதன் பிறகும் கூட ரசிகர்கள் அஜீத் படம் ரிலீசாகும் போதெல்லாம் கட்–அவுட் வைப்பது, போஸ் டர்கள் ஒட்டுவது, இனிப்பு வழங்குவது, தியேட்டர்களில் கொடி தோரணம் கட்டுவது என கொண்டாடி வருகிறார்கள். இதனால் ரசிகர் மன்றத்தை மீண்டும் துவங்க அவர் முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளன.
ரசிகர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. சமூக சேவை பணிகளை மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சட்ட திட்டங்கள் வகுத்து மன்றத்துக்கு அனுமதி வழங்கப் போவதாகவும் செய்தி பரவி உள்ளது. ஆனால் அஜீத்தின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது இது வதந்திதான் என மறுத்தனர்.
அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்கப்போவதாக வந்த செய்தி உண்மையானது அல்ல. தேர்தல் நேரம் என்பதால் யாரோ இந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தை மீண்டும் துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றனர்.
No comments: