Header Ads

தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ

நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மிரட்டில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தன் தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நேற்று நக்மா தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாள் அவர் மீரட் தொகுதிக்குட்பட்ட ஹபூர் என்ற ஊருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார்.

அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா என்பவரும் சென்றிருந்தார். நக்மாவுடன் ஒரே காரில் பயணம் செய்த அவர் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகில் இருந்து அழைத்து சென்றார்.

ஹபூர் அருகே ஒரு ஊருக்கு சென்றபோது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று நக்மாவை வரவேற்றனர். அப்போது நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா, நடிகை நக்மாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

நக்மா முதுகில் கை வைத்த எம்.எல்.ஏ., அவரை கழுத்தில் முத்தமிட முயன்றார். நெரிசலை பயன்படுத்தி எம்.எல்.ஏ. அநாகரீகமாக நடக்க முயல்வதை உணர்ந்த நக்மா, சுதாரித்தப்படி எம்.எல்.ஏ. கையை தட்டி விட்டார். பிறகு அந்த எம்.எல்.ஏ.யை அவர் தன் அருகில் நெருங்க விடவில்லை.

எம்.எல்.ஏ. ஒருவரே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் வேதனை அடைந்த நக்மா அந்த ஊரில் நடக்க இருந்த கூட்டத்தை ரத்து செய்தார். அங்கு பேசாமல் காரில் ஏறி புறப்பட்ட அவர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

பிற்பகலில் அவர் குருத்வாராவுக்கு சென்று வழிபட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் யாரிடமும் புகார் சொல்லவில்லை. என்றாலும் எம்.எல்.ஏ.யின் அநாகரீக செயல் வெளியில் தெரிந்து விட்டது.

ஆனால் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். நக்மாவை பாதுகாப்பாக அழைத்து செல்லவே எம்.எல்.ஏ. முயன்றார் என்றனர். 

No comments:

Powered by Blogger.