மாயமான மலேசியா விமானம் விவகாரம் கடத்தல் உறுதி செய்யப்படவில்லை : தேடும் பணி தொடர்கிறது - மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: நடுவானில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோலாலம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். இன்று கிடைத்த தகவல் படி, விமான கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்படவில்லை எல்லா வகையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். கடைசியாக விமானம் சீன தென் கடல் பகுதியில் பறந்துள்தை பிரதமர் உறுதி செய்தார்.
விமானத்தின் தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் மலேசிய தீபகற்பத்தில் பறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேடுதல் பணி தொடர்வதால் விமான மாயமானதில் எந்த ஒரு தகவலும் உறுதி செய்யப்படாமல் இருப்பதாக பிரதமர் கூறினார். சீன தென் கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், கஜகஸ்தான் - துர்க்மேனிஸ்தான் இடையிலான பகுதியிலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தோனேசியா- தென்னிந்திய பகுதியிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார். மலேசிய விமானத்தை தேடும் பணியில் உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறிய பிரதமர், விரைவில் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
No comments: