ரஷியாவுக்கு பதிலடி: உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி
ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபராக இருந்த விக்டர் யுனுகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள கிரீமியா தன்னாட்சி பகுதிக்கு ரஷியா தனது ராணுவத்தை அனுப்பி முகாமிட்டுள்ளது.
இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷியர்கள். எனவே தற்போது அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் மற்றும் அரசு கட்டிடங்களில் ரஷியா கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து ரஷிய ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெறும் படி வலியுறுத்தினார். அதை ரஷியா காது கொடுத்து கேட்கவில்லை. உக்ரைனின் கிரீமியாவுக்கு தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது.
மேலும் கிரீமியா பகுதிக்கு உக்ரைன் போர்க் கப்பல்கள் வர முடியாதபடி தடுக்க தனது 3 கப்பல்களை கருங்கடலில் மூழ்கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உக்ரைனுக்கு ராணுவ உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. அதற்காக அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் கருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பல் அனுப்பியுள்ளது. போலந்து, லிதுவேனியா நாடுகளுக்கு கூடுதல் போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து டெலிவிஷனுக்கு பேட்டி அளித்து அமெரிக்க ராணுவ ஜெனரல் டெம்சி இதை திட்டவட்டமாக மறுக்கவில்லை.
இதற்கிடையே கிரீமியா பகுதியில் தங்கியிருப்பவர்கள் ரஷியாவுக்கு ஆதரவாகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் போட்டி பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
இதற்கிடையே கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான ஓட்டெடுப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அதற்கு உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைனின் ஒரு சென்டி மீட்டர் நிலத்தை கூட ரஷியாவுக்கு விட்ட தர மாட்டோம் என பிரதமர் ஆர் செனியட்செனியுக் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் பிரதமர் ஆர்செனியட்சென் யுக் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். இவர்கள் சந்திப்பு இந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments: