நயன்தாராவின் ‘மார்க்கெட்' அந்தஸ்து ரகசியம்!
இது கதிர்வேலன் காதல்' படத்தில் உதயநிதியுடன் நடிக்க ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிய நயன், பாண்டிராஜ் இயக்கும் சிம்பு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் கேட்டார். தயாரிப்பு தரப்பும் இதற்கு சம்மதித்ததால், தற்போது முன்னாள் காதலன் சிம்புவுடன் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் 'நண்பேன்டா' படத்தில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் நயன். கல்யாணமான தம்பதிகளுக்குள் நடக்கும் ஊடல், கூடல், சண்டைகள்தான் கதைக்களம். இதில் உதயநிதி மனைவியாக நயன் நடிக்கிறார்.
'இது கதிர்வேலன் காதல்' ஷூட்டிங் நடக்கும்போதே உதயநிதியுடன் நன்றாகப் பழகிய நயன்தாரா, 'அடுத்த படத்திலும் வாய்ப்பு கொடுங்க. கண்டிப்பா நடிக்குறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
உதயநிதியுடன் ஏற்கனவே நடித்ததால் , சம்பளத்தில் இருந்து 50 லட்சம் குறைத்துக்கொண்டாராம் நயன். 'இது கதிர்வேலன் காதல்' சுமாராகப் போனதால் நயன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
'நண்பேன்டா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. கமர்ஷியல் பக்கம் இப்படிக் காய்நகர்த்தும் நயன் விருது ஆசையிலும், திறமைக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 'கஹானி' இந்திப் பட ரீமேக்கான 'நீ எங்கே என் அன்பே' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நயன்தாரா. இது முற்றிலும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படம் என்பதால் சில சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷுடன் ராதா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தில் உள்துறை அமைச்சராக வெங்கடேஷ் நடிக்கிறார். அரசியலை கொஞ்சம் உரக்கப் பேசும் இந்தப் படத்தில் நயன்தாரா அவரின் பிஏ வாக நடிக்கிறார்.
இப்படிப் புதுப்புது நட்பு வட்டங்களில் தன்னை இணைத்துக்கொள்ளும் நயன் ஆர்யாவின் மீது மட்டும் கோபத்தில் இருக்கிறார். 'இரண்டாம் உலகம்' படத்தின்போது அனுஷ்காவுடனும் ஆர்யா நெருங்கிப் பழகியதால் நயன்தாரா கோபம் அடைந்தார்.
இதனால் நயன்தாராவுக்கும் - ஆர்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இப்போது இருவரும் விழாக்களிலோ வெளியிடங்களிலோ சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் இடையே பழைய நட்பு இல்லை. இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தது எனது அதிர்ஷ்டம் என சமீபத்தில் கூறியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. நயன்தாரா எனது அதிர்ஷ்ட தேவதை என்றும் கூறியிருக்கிறார். இதனால் நயன்தாரா கோபம் அடைந்துள்ளாராம்.
நட்பே வேண்டாம் என்றுதான் ஒதுங்கி செல்கிறேன். அதிர்ஷ்ட தேவதை எனக்கூறி எங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்ளப்பார்க்கிறார். தேவையில்லாமல் இவராகவே மீடியாவுக்கு கிசுகிசு தீனி போடுகிறார் என தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி கோபப்படுகிறார் நயன்தாரா.
ஆனால், இதெல்லாம் நயன்தாராவின் மார்க்கெட் சரியாமல் இருப்பதற்காக செய்யப்படும் பலே ஐடியா என்கிறார்கள்.
No comments: